வார விடுமுறை: திருச்செந்தூரில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

10 hours ago
ARTICLE AD BOX

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் வாரவிடுமுறை தினத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது.

இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால், கோவில் வளாகத்தில் ஆங்காங்கே திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி புதுமண தம்பதிகளுடன் உறவினர்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Read Entire Article