ARTICLE AD BOX
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட்நியூஸ்.. UPI Lite சேவை.. இனி ஈஸியா பணம் அனுப்பலாம்!
இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் தற்போது யுபிஐ விரிவடைத் தொடங்கியுள்ளது. அதுவும் யுபிஐ செயலிகள் மூலம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் எந்த சிரமும் இல்லாமல் சில வினாடிகளில் அனுப்ப முடிகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் இந்தியாவில் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஷனை (WhatsApp UPI Lite payment option) அறிமுகப்படுத்தும் எனத் தகவல் கசிந்துள்ளது.
அதாவது வாட்ஸ்அப் v2.25.5.17 பீட்டாவீல் UPI Lite ஆப்ஷன் காணப்பட்டது. எனவே வாட்ஸ்அப் பயனர்களுக்கு யுபிஐ லைட் ஆப்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் யுபிஐ லைட் வந்தால் கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

குறிப்பாக யுபிஐ லைட் என்பது UPI-இன் எளிய பதிப்பாகும். அதுவும் இது நெட்ஒர்க் வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டது. சிறிய அளவிலான தொகையை அனுப்புவதற்காக இந்த யுபிஐ லைட் பயன்படுகிறது. அதேபோல் இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளிலும் யுபிஐ லைட் மூலம் மக்கள் பணம் அனுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர எளிதாக பணம் செலுத்த முடியும் என்பதே இதன் சிறப்பு. அதேசமயம் இது முற்றிலும் பாதுகாப்பானது. அன்றாட செலவுகள் மற்றும் சிறிய அளவில் பணத்தை அனுப்புவதற்கு யுபிஐ லைட்டை பயன்படுத்தலாம். இது தவிர மோசமான நெட்வொர்க் உள்ள பகுதிகளிலும் எளிதாக பணம் அனுப்ப முடியும். டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய அரசின் முயற்சிக்கு யுபிஐ லைட் பெரிதும் பங்களித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தான் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமும் விரைவில் இந்த யுபிஐ லைட் ஆப்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. தற்போது வாட்ஸ்அப் யுபிஐ லைட் பீட்டா பதிப்பில் இருக்கிறது, எனவே இது சோதனையில் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. விரைவில் இந்த வாட்ஸ்அப் யுபிஐ லைட் ஆப்ஷன் வந்தால் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் கொண்டுவருகிறது. அதன்படி சமீபத்தில் கூட வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை கொண்டுவந்தது. உதாரணமாக சில முக்கிய மீட்டிங்கில் யாராவது உங்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தால் அப்போது அதை கேட்க முடியாது. அந்த சமயத்தில் இந்த புதிய அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதாவது இந்த வசதியின் மூலம் வருகின்ற வாய்ஸ் மெசேஜ்களை உடனடியாக டெக்ஸ்டாக மாற்றி படிக்கலாம். சரி இப்போது இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அதாவது வாட்ஸ்அப் ரைட் கார்னரில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவும். அடுத்து "செட்டிங்ஸ்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த செட்டிங்ஸ்-ற்க்குள் பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கும். ஆனால் அதில் இருக்கும் "சாட்" என்பதை தேர்வு செய்யவும். அதன்பின்னர் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என்பதை ஆன் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் ஆன் செய்தவுடன் எந்த மொழியில் டெக்ஸ்ட்களாக மாற்ற வேண்டும் என்பது கேட்கப்படும். தற்போது 4 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இங்கிலீஷ் பலராலும் பயன்படுத்தப்படுகிறது எனவே நீங்கள் இங்கிலீஷை தேர்வுசெய்து கொள்ளலாம்.
இப்போது செட்டப் நவ் என்பதை கிளிக் செய்து, உங்களது வாய்ஸ் மெசேஜ்களை லாங்க் பிரஸ் செய்து ட்ரான்ஸ்கிரிப்ட் என்பதை கிளிக் செய்தால் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் ஆக மாற்றி படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த வாட்ஸ்அப் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.