ARTICLE AD BOX
மார்ச் 11 காலி.. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்ல SONY கேமரா.. 6400mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6400mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கின்றன. இதனால் கேமிங் மட்டுமல்லாமல், கேமரா பிரியர்களுக்குமான மாடலாக இந்த ஐக்யூ நியோ 10ஆர் போன் இருக்கப் போவது உறுதியாகிவிட்டது.
இந்த ஐக்யூ போனின் சிப்செட், பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் ஏற்கனவே மார்கெட்டில் வெளியாகிவிட்டன. மார்ச் 11ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகமாக இருக்கும் இந்த போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் நடக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இப்போது டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுபோக செய்தி வெளியீடு மூலம் கேமரா பீச்சர்கள் உறுதியாகி இருக்கிறது. இந்த பீச்சர்கள் எதிர்பார்த்தைவிட பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. சீனாவில் வெளியான ஐக்யூ இசட்9 டர்போ எண்டுரன்ஸ் எடிஷனின் ரீ-பிராண்ட் வெர்ஷனாக இந்த மாடல் இருக்கும் என்று தகவல் வெளியானாலும் அதைவிட கூடுதல் பீச்சர்களை இப்போது உறுதி செய்துள்ளது.
அதாவது, ஐக்யூ இசட்9 டர்போ எண்டுரன்ஸ் எடிஷனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைத்தது. ஆனால், இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கிடைக்க இருக்கிறது. டிஸ்பிளேவில் பிளாட் டிசைனில் ஐ கேர் பேனல் கிடைக்கிறது.
ஆகவே, 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 பீக் பிரைட்னஸ், 3840Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 90 எப்பிஎஸ் (FPS) மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் மோட் (E-sports Mode) கிடைக்கிறது. 6400mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங், வேப்பர் கூலிங் சேம்பர் (Vapour Cooling Chamber) மற்றும் பைபைஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் வருகிறது. இந்த பேட்டரி இருந்தும் 0.798 செ.மீ அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்3 எஸ்ஓசி (Snapdragon 8s Gen 3 SoC) கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் ஃபாஸ்ட்டஸ்ட் வெர்ஷனாகும்.
மூன்நைட் டைட்டானியம் (Moonknight Titanium) மற்றும் டூயன்-டோன் கொண்ட ராகிங் ப்ளூ (Raging Blue) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே ஐக்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மற்றும் இந்த ஐக்யூ நியோ 10ஆர் போனின் விலை எப்படி இருக்கும் என்பதையும் பார்ப்போம்.
ஐக்யூ நியோ 10ஆர் அம்சங்கள் (iQOO Neo 10R Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 மெமரி உள்ளது. இந்திய மார்கெட்டில் ரூ.26,999 ஆரம்ப விலையில் விற்பனைக்க வர இருக்கிறது.