ARTICLE AD BOX
வாட்டி எடுக்கும் குளிர்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மழை இல்லை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழக்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
நேற்று தென்தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டத்தில்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 90 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களை பொறுத்தவரை, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 26 முதல் 28 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜன.1ம் தேதி தொடங்கி இன்று வரை அதிகபட்சமாக திருநெல்வேலயில் 22 செ.மீ அளவுக்கு மழை செய்திருக்கிறது. இது இயல்பை விட 815 சதவிகிதம் அதிகமாகும். இதனை தொடர்ந்து திருப்பத்தூரில் 355 சதவிகிதமும், திருப்பூரில் 334 சதவிகிதமும், வேலூரில் 369 சதவிகிதமும் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சியில் குறைந்தபட்ச மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! சேர்களை வீசி கொடூர தாக்குதல்! பதற வைக்கும் சம்பவம்
- சென்னை நீலாங்கரை வீட்டில் உருட்டுக்கட்டைகளுடன் நின்ற தம்பிகள்! நாதக சீமான் மீது வழக்குப் பதிவு
- அச்சுறுத்தும் உண்ணி காய்ச்சல்.. தமிழகத்தில் அடுத்தடுத்து பலருக்கு பாதிப்பு! அறிகுறி & சிகிச்சை என்ன?
- தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு! 4 மாதங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- லேசான மழை + அதிக குளிர்.. தமிழகத்தில் அடுத்த 2 நாள் வெளியே போகவே முடியாது! வானிலை மையம் மேஜர் தகவல்
- தமிழ்நாட்டுக்கு இட்லி வந்த கதை தெரியுமா? அடேங்கப்பா இதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா!
- தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கண்டுபிடிப்பு- ராகுல் காந்தி புகழாரம்
- “மக்களுக்கு நம்பிக்கை வரனும்..” தமிழக டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
- குளிர் நடுங்குதே.. இன்னும் எத்தனை நாள் குளிர் இருக்கும்? எங்கே அதிகமாக இருக்கும்! வானிலை மையம் தகவல்
- மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்
- 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் இரும்பின் பயன்பாடு- இரும்புக் காலம் என்பது என்ன?
- சிம்ரனுக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது! நள்ளிரவில் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற கனவுக்கன்னி