கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகுது பிரையண்ட் பூங்கா: டேலியா நாற்று நடவு பணி தொடக்கம்

21 hours ago
ARTICLE AD BOX

கொடைக்கானல்: கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியையொட்டி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2ம் கட்டமாக டேலியா மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் தலங்களில் பிரையண்ட் பூங்காவும் ஒன்று. இங்கு வரும் மே மாதம் கோடை சீசனில் 62வது மலர் கண்காட்சி நடக்க உள்ளது.

இதையொட்டி முதற்கட்டமாக கடந்த நவம்பரில் சால்வியா, டெல்பினியம், பிங்க் ஆஸ்டர், லில்லியம், ஆர்நத்திகளம் என ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக டேலியா மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது. இதனை கொடைக்கானல் தோட்டக்கலை துறை அலுவலரும், பிரையண்ட் பூங்கா மேலாளருமான சிவபாலன் துவங்கி வைத்தார். தொடர்ந்து கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வீரிய ஒட்டுரகத்தை சேர்ந்த 13 ஆயிரம் டேலியா மலர் நாற்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.

12க்கும் மேற்பட்ட வண்ணங்கள் கொண்ட டேலியா பூக்கள் பூக்கும் வகையில் நடப்பட்டு வருகின்றன. இந்த பணி ஒரு வாரம் நடக்கவுள்ளது.இதுகுறித்து பூங்கா மேலாளர் சிவபாலன் கூறுகையில், ‘‘மூன்றாம் கட்டமாக வரும் பிப்ரவரியில் மலர் நாற்றுகள் நடும் பணி நடைபெறும். இதன் மூலம் கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியின் போது சுமார் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்கும்’’ என்றார்.

The post கோடை மலர் கண்காட்சிக்கு தயாராகுது பிரையண்ட் பூங்கா: டேலியா நாற்று நடவு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article