வாக்யூம் க்ளீனர் (vacuum cleaner) தெரியும். அதன் வெவ்வேறு வகையான பயன்பாடுகள் தெரியுமா?

20 hours ago
ARTICLE AD BOX

வாக்யூம் க்ளீனர் என்றால் தரையில் உள்ள தூசி மற்றும் சிறு சிறு குப்பைப் பொருட்களை சுத்தம் செய்ய உதவும் ஓர் உபகரணம் என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதையும் தாண்டி வேறு பல சுத்தம் செய்யும் செயல்பாடுகளுக்கும் அது உபயோகப்படும் என்பது நம்ப முடியாத உண்மை. வாக்யூம் க்ளீனர் கொண்டு க்ளீன் பண்ணக்கூடிய 7 வகையான பொருட்கள் எவை என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1.சீலிங் ஃபேன்: சில மாத உபயோகத்திற்குப் பின்  சீலிங் ஃபேனில் படிந்திருக்கும் தூசியின் அளவை விவரிக்க இயலாது. ஏணி வைத்து ஏறி கைகளால் சிரமப்பட்டு சுத்தம் செய்வதற்குப் பதில் வாக்யூம் க்ளீனர் உபயோகிக்கலாம். இதற்காகவே ப்ரத்யேகமாக தரப்பட்டுள்ள தூசி நீக்கும் பிரஷை இணைத்து மொத்த தூசி மற்றும் அழுக்குகளை நீக்கிவிடலாம்.

2.கீ போர்டு மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள்: கீ போர்டு மீது குப்பை சேரும்போது ஸ்பேஸ்  பார் வேலை செய்யாது. ஸ்கிரீன் மீது புள்ளிகளாகவும் திட்டுக்களாகவும் அழுக்கு சேரும். கவலை வேண்டாம். வாக்யூம் க்ளீனரில் சிறிய குழாய் போன்ற மூக்கு வடிவிலான (nozzle) இணைப்பை சேர்த்து, உறிஞ்சும்  திறனின் அளவை குறைத்து வைத்தும் செயல்பட வைக்கும்போது உங்கள் கீ போர்டு, ஃபோன், லேப்டாப், போன்றவற்றின் சிறிய இடைவெளிகளில் உள்ள உணவுப்பொருள் உள்ளிட்ட குப்பைகள் அனைத்தையும் வெளிக் கொண்டு வந்து விடலாம். சிறிய பிரஷை இணைத்து அழுக்குகளையும் நீக்கி விடலாம்.

3. பேஸ்போர்டுகள் மற்றும் மோல்டிங்: வீட்டில் அறையின் சுவர்கள் மற்றும் தரையை இணைக்கும் இடைவெளியில் உள்ள பேஸ்போர்டு (baseboard)களின் அடியில் தூசி, ஒட்டடை மற்றும் செல்லப் பிராணிகளின் உரோமம் போன்ற குப்பைகள் தேங்குவது வழக்கமான ஒன்று. குறுகிய இடைவெளிகளிலும் நுழைந்து சுத்தப்படுத்தக் கூடிய இணைப்பை வாக்யூம் க்ளீனரில் இணைத்தும், ஹோஸ் பைப்பின் நீளத்தை அதிகரித்தும் சிரமமின்றி இந்தக் குப்பைகளை அகற்றிவிடலாம்.

4.வீட்டின் உள்ளே இருக்கும் அலங்காரச் செடிகள்:

வீட்டில் உள் அலங்காரமாக வைத்திருக்கும் தொட்டியை சுற்றி காய்ந்த இலைகள் மற்றும் மண் போன்றவை சிதறி விழுந்து அழகை கெடுக்கும் விதமான தோற்றம் தரும். அப்போது வாக்யூம் க்ளீனர் கொண்டுவந்து அதன் உறிஞ்சும் திறனின் அளவை குறைத்து வைத்து மெதுவாக குப்பைகளை அந்த இடத்திலிருந்து நீக்கி விடலாம். வாக்யூம் க்ளீனரில் பிரஷை இணைத்து செடியின் இலைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் நீக்கிவிடலாம்.

இதையும் படியுங்கள்:
பிடிவாதமாக இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?
different types of vacuum cleaner

5.ஏர் பியூரிஃபையர் மற்றும் ஃபில்டர்: வீட்டினுள் வரும் காற்று மாசற்றதாக இருக்க நாம் ஏர் பியூரிஃபையர் உபயோகப்படுத்துகிறோம். அதன் ஃபில்டரின் உள்ளே அடைப்பு ஏற்படும்போது அது நார்மலாக வேலை செய்யாது. அப்போது அதன் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு ஃபில்டரை கழற்றி எடுக்கணும். பின் வாக்யூம் க்ளீனரில் சிறிய பிரஷை இணைத்து கவனமுடன் தூசி மற்றும் அழுக்குகளை நீக்கி விடலாம். இதே முறையில் டிஹுமிடிஃபையர், டிரையர் வென்ட்ஸ் போன்ற மற்ற ஃபில்டர்களையும்  சுத்தப்படுத்தி அவைகளின் செயல்பாட்டை நீண்ட நாட்கள் சிறக்கச் செய்யலாம்.

6.ஷவர் மற்றும் பாத்ரூம் டைல்ஸ்: பாத்ரூமில் இரண்டு டைல்ஸ்களை இணைக்கும் இடைவெளிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கவும் வாக்யூம் க்ளீனரை உபயோகிக்கலாம். இடைவெளிகளில் புகுந்து பிளவுகளை சுத்தப்படுத்தும் வல்லமை கொண்ட கருவியை வாக்யூம் க்ளீனருடன் இணைத்து செயல்படுத்தும்போது அதன் நாசில் (nozzle) வழியே அனைத்து அழுக்குகளும் வெளிக்கொணரப்பட்டுவிடும் 

7. படுக்கை: நாம் படுத்துறங்க பயன்படுத்தும் படுக்கையை அவ்வப்போது தூசி தட்டி சுத்தப்படுத்தி வைத்தாலும் நாளடைவில் படுக்கை மீது சிறு கட்டிகள் வீக்கம் போன்ற வடிவில் அமைப்பு உண்டாகும். அது படுக்கும்போது அசௌகரியம் உண்டு பண்ணும். மேலும் பூச்சிகளின் உற்பத்திக் கூடாரமாகவும் மாறும். எனவே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை படுக்கையின் அனைத்துப் பக்கங்களையும் வாக்யூம் கொண்டு சுத்தம் செய்வது நன்மை தரும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்காலத்தில் செல்ல பிராணிகளை பராமரிக்கும் வழிமுறைகள்!
different types of vacuum cleaner
Read Entire Article