வாக்கிய பஞ்சாங்கம் Vs திருக்கணிதம்: சனிப்பெயர்ச்சி எப்போது தெரியுமா?.. முழு விவரம் இதோ

2 hours ago
ARTICLE AD BOX

வாக்கிய பஞ்சாங்கம் Vs திருக்கணிதம்: சனிப்பெயர்ச்சி எப்போது தெரியுமா?.. முழு விவரம் இதோ

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: எல்லோராலும் சனிப்பெயர்ச்சி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறதா (2025) அல்லது அடுத்த ஆண்டா (2026) என்ற பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி எப்போது நடக்கிறது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..

சூரிய உதயம் முதல் இரவு வரையிலான காலகட்டம் தான் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. அந்த நாளில் கோள்களின் நகர்வுகளைக் கொண்டும், கோள்கள் எப்படி சுழல்கின்றன என்பதைக் கொண்டும் கணிப்பதே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தைப் பொருத்தவரை பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகையான பஞ்சாங்கங்களை ஜோதிடர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

Sani peyarchi Sani peyarchi palangal

இதில், வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பின்பற்றப்பட்டு வரும் பஞ்சாங்காமாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள சில விஷயங்கள் திருத்தியமைக்கப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சனி பகவானுக்கு உரிய திருத்தலங்கலான திருநள்ளாறு, பிராணேஸ்வரி உள்ளிட்ட பல கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நடைமுறையே பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் கடைப்பிடிக்கப்படுவதால் வாக்கிய பஞ்சாங்கமே சரி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் திருத்தியமைக்கப்பட்ட திருக்கணிதப் பஞ்சாங்கமே சரி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கம் ஆகிய இரு பஞ்சாங்கங்களும் ஜோதிடர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர மற்ற பகுதிகளில் திருக்கணிதப் பஞ்சாங்க முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

திருக்கணிதப் பஞ்சாங்கம் சரியா, வாக்கியப் பஞ்சாங்கம் சரியா என்ற குழப்பம் ஆண்டாடுகாலமாக உள்ளது. இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்காமல் உள்ளது. இருந்தாலும், ஜோதிடர்கள் அவரவர் அனுபவம், ஆராய்ச்சியைக் கொண்டு திருக்கணிதத்தையும், பஞ்சாங்கத்தையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி எப்போது, வாக்கி பஞ்சாங்கப்படி எப்போது என்று பார்க்கலாம்.

2025 Vs 2026 - சனிப்பெயர்ச்சி எப்போது?

திருக்கணிதப் பஞ்சாக்கத்தின்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் இரவு 11:01 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மீனத்துக்குப் பெயர்ச்சியாகும் சனி பகவான் அங்கு இரண்டரை ஆண்டுகாலம் தங்கி ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களையும், ஒரு சிலருக்கு படிப்பிணைகளையும் கொடுக்கப் போகிறார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மீனத்தில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் 12 ராசியினருக்கு அருளை வழங்கப் போகிறார்.

More From
Prev
Next
English summary
While the Saturn transit is being eagerly awaited by everyone, there is a lot of confusion whether the Saturn transit will take place this year (2025) or next year (2026). You can find out in detail about when the Saturn transit will take place in this astrology article.
Read Entire Article