வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை! மத்திய அரசு விளக்கம்!

3 hours ago
ARTICLE AD BOX

வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை! மத்திய அரசு விளக்கம்!

Delhi
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வழங்கப்பட்ட USAID நிதி, ஆட்சி மாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த நிதி வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி, முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்றும், குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை காங்கிரஸ் மறுத்திருக்கிறது. மறுபுறும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் நிதியை பாஜக எப்படி கையாள்கிறது? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

US Finance Ministry

இந்நிலையில், இந்த நிதியை கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தற்போது அமெரிக்கா USAID நிதியாக ஏறத்தாழ $750 மில்லியன் வழங்கியிருப்பதாகவும், இதில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் வாக்காளர், தேர்தல் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மொத்தம் 825 கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்க கடன் வழங்கியுள்ளது. ஆனால் இந்த நிதியை கொண்டு தேர்தலில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

அதற்கு பதில் விவசாயம் உணவு பாதுகாப்பு நீர் மேலாண்மை சுகாதாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர காடுகள் மற்றும் காலநிலை தகவல் திட்டத்திற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரச கூறியுள்ளது.

அமெரிக்கா இவ்வாறு உதவி செய்வது கடந்த 1951 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்து வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் சுகாதாரத்திற்கும் மருத்துவ மேம்பாட்டிற்கும் இந்த நிதி அதிக அளவில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் இந்த நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. காங்கிரஸ் களத்தில் ஒதுக்கப்பட்ட நீதி பாஜகவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அப்பொழுது பல வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து இந்தியாவுக்கு எதிரான ஊழல் பிரச்சனைகளை எழுப்புமாறு அவர் வலியுறுத்தியதாக பாஜக குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்காகவே அமெரிக்கா உருக்கிய நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி இருக்கிறது. பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கடுமையாக மறுப்பு தெரிவித்து வருகிறது.

More From
Prev
Next
English summary
There have been criticisms that the USAID funds provided to increase voter participation in elections were used for regime change. In this situation, the central government has clarified that these funds were not used by USAID to boost voter participation.
Read Entire Article