வரும் ஆண்டுகளில் 20ஆயிரம் விமானிகள் இந்தியாவிற்கு தேவை: விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்

4 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: டெல்லியில் விமானகளுக்கான மின்னணு பணியாளர் உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து உதான் பவனில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் ராம்மோகன் ‘‘நாயுடு கூறுகையில், விமானப்போக்குவரத்தானது எப்போதும் இணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முதுகெலும்பாக இருந்து வருகின்றது.

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் மேலும் 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 157 என இருமடங்காக அதிகரித்துள்ளது. 1700 விமானங்களுக்கான ஒப்பந்தம் எங்களிடம் இருக்கின்றது. வரும் ஆண்டுகளில் நாம் காணப்போகும் இவ்வளவு வளர்ச்சியுடன் எதிர்காலத்தில் குறைந்தது சுமார் 20ஆயிரம் விமானிகளின் தேவை இருக்கும்” என்றார்.

The post வரும் ஆண்டுகளில் 20ஆயிரம் விமானிகள் இந்தியாவிற்கு தேவை: விமான போக்குவரத்து அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article