வருமான வரி மசோதா ஆய்வு நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது

2 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்டத்தில், 60 ஆண்டுகால வருமான வரி சட்டத்தை மாற்றும் வகையில் புதிய வருமான வரி சட்ட மசோதாவை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், வருமான வரி தாக்கலில் உள்ள மதிப்பீட்டு ஆண்டு, முந்தைய ஆண்டு போன்ற சொற்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி வரி ஆண்டு என மாற்றப்படுகிறது. மேலும் பல விதிகள், விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கடந்த 14ம் தேதி 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழுவை அமைத்தார். குழுவின் தலைவராக பாஜ எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டாவும், உறுப்பினர்களாக அக்கட்சியின் நிஷிகாந்த் துபே, பிபி சவுத்ரி, மஹ்தாப் உள்ளிட்ட எம்பிக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்பிக்கள் தீபேந்தர் சிங் ஹூடா, திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் உள்ளனர். வரும் ஜூலை 3ம் வாரத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளுக்குள் இந்த குழு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.

The post வருமான வரி மசோதா ஆய்வு நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article