ARTICLE AD BOX
வரகரிசியை ஒருடைம் இப்படி உப்புமா செஞ்சு சாப்பிடுங்க.. ருசியாவும் இருக்கும்.. சத்தானதும் கூட...
Varagu Arisi Upma Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறுதானியங்களை சமைத்து சாப்பிடுங்கள். சிறு தானியங்களில் வரகரிசி, திணை என்று பல உள்ளன. இவற்றைக் கொண்டு பெரும்பாலானோர் கஞ்சியை தான் செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இந்த வரகரிசியைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்து சாப்பிடும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். இந்த வரகரிசி உப்புமா உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போருக்கு ஏற்ற சிறந்த காலை உணவாக இருக்கும்.

உங்களுக்கு வரகரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 1 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த அரிசியில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து,
வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து, உப்பு தூவி
5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள வரகரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான
தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான வரகரிசி உப்புமா
தயார்.