வணங்கான் முதல் பாட்டில் ராதா வரை: இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் பட்டியல்

3 days ago
ARTICLE AD BOX

வாரந்தோறும் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாவதை போல், ஒடிடி தளங்களிலும் புதிய படங்கள் வெளியாகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கே ரசிகாகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 3-வது வாரமான இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் முக்கிய படங்களின் பட்டியலை பார்ப்போம்.

Advertisment

வணங்கான் - பிப்ரவரி 21 முதல் டெண்ட்கோட்டாவில் ஸ்ட்ரீமிங்

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வணங்கான், திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) முதல் டெண்ட்கோட்டா ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. படத்தின் வன்முறையின் தீவிர சித்தரிப்பை பலர் ஒரு பேச்சுப் பொருளாகக் குறிப்பிட்டனர். அருண் விஜய்யின் கேரக்டருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், ரோஷ்னி பிரகாஷ் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்.

சாட்சி பெருமாள்- டெண்ட்கோட்டாவில் ஸ்ட்ரீமிங்

Advertisment
Advertisement

வி.பி. வினுவின் இயக்கத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட சாட்சி பெருமாள் திரைப்படம் டெண்ட்கோட்டா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே. வீரா ஆகியோர் நடித்துள்ளனர். மதன் கார்த்திக் ஒளிப்பதிவும், மஸ்தான் இசையும் அமைத்த இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பத்து விருதுகளை வென்றுள்ளது, மேலும் அதன் சுவாரஸ்யமான கதைக்காகப் பாராட்டப்பட்டது. இயக்குனர்-நடிகர் சிங்கம்புலியும் படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம் மற்றும் கவர்ச்சிகரமான நடிப்பிற்காகப் பாராட்டினார்.

பாட்டில் ராதா - பிப்ரவரி 21 முதல் ஆஹா தமிழில் ஸ்ட்ரீமிங்

குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்த பாட்டில் ராதா, திரைப்படம் வெற்றிகரமான திரையரங்கு ஓட்டத்திற்குப் பிறகு, இன்று (பிப்ரவரி 21) முதல் ஆஹா தமிழில் திரையிடப்பட உள்ளது. ஜனவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் நடிப்பிற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பாரி இளவழகன் மற்றும் ஆறுமுகவேல் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஆபீஸ் - வெப் தொடர்

திரைப்படங்களை விட வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் அதிகமான வெப் தொடர்ந்து வாரந்தோறும் வெளியாகி வருகிறது, அந்த வகையில், இன்று  (பிப்ரவரி 21) முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் புதிய வெப்தொடர் தான் ஆஃபீஸ் பாட்டு. உப்புப்புலி கரம் மற்றும் ஹார்ட் பீட் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த தளத்தின் தமிழ் அசல் தொடர்களின் வரிசையில் இந்த வெப் தொடர் வெளியாகியுள்ளது,

பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக தனது கணவரின் பெயரைக் குறிப்பிட மறுக்கும் ஒரு பெண் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற முயற்சிப்பதில் இருந்து தொடங்கும் இந்தத் தொடர் இதன் விளைவாக ஏற்படும் குழப்பம் மற்றும் நகைச்சுவை திருப்பங்கள் இதை கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாக ஆக்குகின்றன.

முபாசா தி லையன் கிங்

பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங். கடந்த டிசம்பர் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம், காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டப்பட்டுள்ள இப்படம் கடந்த18-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

டாகு மகாராஜ்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் 'டாகு மகாராஜ்' . பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கத்தில் வெளியான  இப்படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று (பிப்ரவரி 21) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

செல்பி

இயக்குனர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்த படம் செல்பி. இயக்குனர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய 'வி கிரியேசன்ஸ்' மூலம் தயாரித்துள்ள இப்படம் இன்று (பிப்ரவரி 21)சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

Read Entire Article