ARTICLE AD BOX
வடபழனி பணிமனை முன்பு ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
வடபழனி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்த அசோகன் 30 ஆண்டுகள் பணியை முடித்து நேற்று பணி ஓய்வு பெற்றார். பணி நிறைவு விழாவில் மாலை அணிவித்து அசோகனுக்கு எந்தவித பண பலன்களும் தராமல் அனுப்பியதால், அசோகன் தனது குடும்பத்தினர் மற்றும் சிஐடியு நிர்வாகிகளுடன் நேற்று இரவு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஓய்வு பெற்ற பின்பு தாங்கள் வழங்கிய தட்டை வைத்து பிச்சைதான் எடுக்க வேண்டும். எந்தவித பண பலன்களும் இல்லாமல் பல தொழிலாளிகள் இறந்து விட்டார்கள். அகையால் உடனடியாக பண பலன் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா். பின்னர் காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்த பின் கலைந்து சென்றனர்.
காக்கா முட்டை பட பாணியில் சம்பவம்: ஓடும் ரயிலில் செல்போன்களை கம்பில் தட்டி பறித்த இளைஞர்கள் கைது