ARTICLE AD BOX
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். இதையடுத்து காதலும் கடந்துபோகும், காலா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த மணிகண்டனுக்கு சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் நடித்த மணிகண்டன், குட் நைட் படம் மூலம் சக்சஸ்புல் ஹீரோவாக உருவெடுத்தார். குட் நைட் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.
குட் நைட் படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ்வர் திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். அப்படம் கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கே போட்டியாக ரிலீஸ் ஆகி அப்படத்தை வசூலில் தோற்கடித்து மாஸ் காட்டியது. லவ்வர் படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிகண்டன் நடிப்பில் உருவான படம் குடும்பஸ்தன். இப்படத்தை ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். இப்படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... இயக்குனராகும் மணிகண்டன்; முதல் படமே 1000 கோடி வசூல் அள்ளிய நடிகருடனாம்!
குடும்பஸ்தன் திரைப்படம் குடியரசு தின விடுமுறையை ஒட்டி கடந்த ஜனவரி 24ந் தேதி திரைக்கு வந்தது. நகைச்சுவை கலந்த பேமிலி செண்டிமெண்ட் திரைப்படமாக உள்ளதால் குடும்பஸ்தன் திரைப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் மூலம் ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியையும் ருசித்துள்ளார் மணிகண்டன். இப்படம் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
அந்த வகையில் குடும்பஸ்தன் திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.4 கோடி வசூலித்திருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் அப்படத்தின் வசூல் முதல் இரண்டு நாட்களை விட அதிகரித்தது. இப்படம் நேற்று மட்டும் ரூ.3 கோடி வரை வசூலித்திருக்கிறது. இதன்மூலம் மூன்று நாட்களில் குடும்பஸ்தன் திரைப்படம் ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்கள் கூட மூன்று நாட்களில் இந்த அளவு வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ப்ளூ சட்டையே இப்படி சொல்லிட்டாரே; குடும்பஸ்தன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ