லோகேஷ் கனகராஜ் படத்தில் எனக்கு ரஜினியின் மகள் கேரக்டர்!.. புலம்பும் பிரபல நடிகை!...

2 hours ago
ARTICLE AD BOX

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பெரிய படங்களை இயக்கினார். இதையடுத்து பெரிய நடிகர்களின் பார்வை லோகேஷ் பக்கம் திரும்பியிருக்கிறது.

ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். விஜயை வைத்து இவர் இயக்கிய லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சரியாக அமையவில்லை. அதோடு, அந்த படத்தில் வருவது போல நரபலி கொடுக்கும் பழக்கமெல்லாம் கிறிஸ்துவ மதத்தில் இல்லை என பலரும் சொன்னார்கள்.


விஜய் லியோ: விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே லோகேஷுக்கு போன் செய்து இதை சொல்லியிருக்கிறார். ஒருகட்டத்தில் லியோ படத்தின் 2ம் பாதியில் தான் தவறு செய்துவிட்டதாக லோகேஷோ ஒப்புக்கொண்டார். இப்போது ரஜினியை வைத்து கூலி என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ரஜினி கூலி: இந்த படமும் லோகேஷின் ஸ்டைலில் பக்கா கேன்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. படத்தின் 70 சதவீத காட்சிகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. லோகேஷுடன் ரஜினி இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


மாளவிகா மோகனன்: இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவரும், மாஸ்டர் படத்தில் நடித்தவருமான மாளவிகா மோகனன் ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் ‘மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி சார் நடிக்கும் படத்தில் நான் மகளாக நடிக்கவிருந்தேன். ஆனால், கொரோனா வந்துவிட்டதால் அது நடக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க லோகேஷ் இயக்கும் ஒரு படம் துவங்கியது. ஆனால், சில காரணங்களால் ரஜினி அதிலிருந்து விலகினார். இந்த படத்தில்தான் மாளவிகா நடிக்கவிருந்தாரா என்பது தெரியவில்லை. அதன்பின் கமல் - லோகேஷ் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கினார்கள்.

அப்போது நடக்க முடியாமல் போனதால்தான் இப்போது கூலி உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த கதைதான் அப்போது சொல்லப்பட்டு மாளவிகா நடிக்கவிருந்தாரா என்பதும் தெரியவில்லை. மொத்தத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு மாளவிகாவுக்கு அமையவில்லை.

Read Entire Article