ARTICLE AD BOX
சினிமா பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விவரம் பார்ப்போம்..
சினிமா பிரபலங்களுக்கான இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இதில் இந்த ஆண்டு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் 8-ந் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இதில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி டப்பாங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர்.
2025 செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்11-வது சீசனுக்கு ஹைதராபாத், திருவிழாக் கோலமாக தயாராகி வருகிறது.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் முதல் போட்டியில், சென்னை ரைனோஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் மோத உள்ளது. இந்த போட்டி 2 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அதே நாளில் 6.30 மணிக்கு தெலுங்கு வாரியஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி மோத உள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 9-ந் தேதி, பிற்பகல் இரண்டு மணிக்கு பெங்கால் டைகர்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷேர் அணியும், மாலை 6 மணிக்கு மும்பை ஹீரோஸ் மற்றும் போஜ்புரி டப்பாங்ஸ் அணிகள் மோத உள்ளது.
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 23 வரை இந்த லீக் போட்டி நடக்கும். மார்ச் 1 ந் தேதியில் செமி பைஃனலும், மார்ச் 2-ந் தேதி பைஃனலும் நடக்கும். இந்த முக்கியமான போட்டிகள் 2025 சீசனுக்கான இறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும்.
இந்த இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறும் என்றும், இந்தியாவின் கிரிக்கெட் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த போட்டி இருக்கும். இந்த போட்டி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில், பாலிவுட்டின் ஸ்டார் நடிகரான சல்மான் கான் மற்றும் பல திரைப்பிரபலங்கள் தோன்றி, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவார்கள். இந்த விளையாட்டு திரைப் பிரபலங்களிடம் இருக்கும் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பல மொழி நடிகர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்த போட்டி, CCL தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது மட்டுமல்லாமல் Disney+ Hotstar ல் நேரலையில் பார்க்கலாம். கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில், கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வர்ணனைகளும் இருக்கும் என செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தரப்பு அறிவித்துள்ளது. ‘கப்பு’ முக்கியம்ல..
The post திரைப் பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி: கோப்பையை வெல்லும் அணி எது? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.