ARTICLE AD BOX
Game Changer: இந்தியன் 2 தோல்விக்கு பிறகு ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். ராம்சரண், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் பல வருடங்களாக உருவான படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
ப்ரோமோஷனுக்காகவே தயாரிப்பாளர் பணத்தை தண்ணியாக செலவு செய்தார். ஷங்கர் கூட பல பேட்டிகள் கொடுத்து படத்தை பிரமோட் செய்தார்.
ஆனாலும் கூட படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை நஷ்டமானது.
420 கோடி வரை செலவு செய்யப்பட்டிருந்த இப்படம் 200 கோடியை கூட தொடவில்லை. படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக அமைந்தது.
ஓடிடியில் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்
அது மட்டும் இன்றி சங்கர் பல வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறார். இன்னும் அப்டேட் ஆகவில்லை என்ற கருத்துக்களும் எழுந்தது. இப்படி தியேட்டரில் மொக்கை வாங்கிய கேம் சேஞ்சர் டிஜிட்டலுக்கு வருகிறது.
படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வரும் 7ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இப்போதாவது படத்திற்கு ஆடியன்ஸ் வரவேற்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.