ARTICLE AD BOX
அமீர் கானுடன் புதிய படம்? லோகேஷ் கனகராஜின் கைதி 2 படம் வெளியாக தாமதமாகலாம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 2019 ஆம் ஆண்டு வெளியான அவரது வெற்றிப்படமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) முக்கிய பகுதியாக இருக்கும் கைதி 2 படத்திற்கு முன் ஒரு புதிய படத்தை இயக்குவது பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இரண்டு முக்கிய திட்டங்களை கையில் வைத்துள்ளார். ஒன்று ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் இரண்டாவது கார்த்தி நடிக்கும் கைதி 2.
இருப்பினும், கைதி 2 படத்திற்கான பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு அவர் மற்றொரு படத்தை எடுக்கக்கூடும் என்று சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊகங்கள் பரவி வருகின்றன.
அமீர் கான்
கூலி படத்தில் அமீர் கான்
ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடிக்கும் கூலி திரைப்படத்தில் அமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், அமீர் கானுடனான பேச்சுவார்த்தைகள் ஒத்துவந்தால், லோகேஷ் கனகராஜ் அவருடன் ஒரு முழு நீள படத்தை எடுக்கக்கூடும்.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, மற்றும் சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் அடுத்த நடவடிக்கை நிச்சயமற்றதாக இருந்தாலும், அவர் கைதி 2 படத்திற்கு முன்னுரிமை அளிப்பாரா அல்லது முதலில் அமீர் கானுடன் ஒரு புதிய படத்தைத் தொடங்குவாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.