லெஸ்பியனா? நடிகை ஜாக்குலின் ஆவேசம்

5 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் ஜாக்குலின். தமிழில் மேலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜாக்குலினிடம் அவருக்கு வந்த ஒரு கமெண்ட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, ரசிகர் ஒருவர் நீ லெஸ்பியனா? என கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு ஜாக்குலின், ‘‘ஒரு 3 நண்பர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோ போட்டால் உடனே இது போன்று கமெண்ட் செய்து விடுகின்றனர். அவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு உள்ளது போல. நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என நாம் யோசிப்பதற்குள்ளேயே இன்னொருவர் ஒரு விஷயம் கூறும்போது, நீ அப்படி தான் யோசிப்பியா, ஏன் அப்படி ஒரு மோசமான கமெண்ட் போடுகிறாய். என கேட்க எனக்கு தோன்றும். என்னைப் போல பல பெண்கள் போட்ட புகைப்படத்திற்கு கூட அப்படியெல்லாம் கமெண்ட் போட்டுள்ளார்கள். அந்த கமெண்ட் பார்க்கும் போது, பைத்தியமாடா நீ, அவளுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி புருஷன் இருக்காரு என நினைப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

Read Entire Article