ARTICLE AD BOX
Published : 23 Jan 2025 10:07 AM
Last Updated : 23 Jan 2025 10:07 AM
லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்
<?php // } ?>லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையானது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சற்றே தணிந்த காட்டுத்தீ தற்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் தீ பரவி வருகிறது. இப்போது மூண்டுள்ள காட்டுத்தீ 21 சதுர கிலோமீட்டர் அளவில் எரிந்து வருகிறது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தலைவர் ராபர்ட் ஜென்சன் கூறுகையில், “கடந்தமுறை ஈட்டன், பாலிஷேட்ஸ் பகுதியில் காட்டுத்தீயால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அந்த படிப்பினையால் இம்முறை வடக்குப் பகுதியில் தீ பரவியவுடனேயே பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினோம். முந்தைய பாதிப்பை சுட்டிக்காட்டியே மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டோம். அரசு உத்தரவை சட்டை செய்யாமல் உடனடியாக வெளியேற ஊக்குவித்தோம்.” என்றார்.
இதற்கிடையே, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்களும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
காரணம் என்ன? - காஸ்டேயிக் ஏரியை ஒட்டிய பகுதியில் ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே 5000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவியுள்ளது. மீண்டும் இவ்வளவு வீரியமாகக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் இதுதான் என உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் காற்றில் குறைந்த ஈரப்பதம், பலமான காற்று ஆகியன மீண்டும் காட்டுத் தீ பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.
மக்கள் வீடுகளில் இருந்து பொருட்களை அள்ளிக் கொண்டு அவசர அவசரமாக புறப்படும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. அப்போது ஒருவர், “என் வீட்டை இத்தீ கபளீகரம் செய்யாது என நம்புகிறேன். உயிருக்கு அஞ்சி இப்போது இடம்பெயர்கிறோம். மீண்டும் வரும்போது வீடு மிஞ்ச வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- எச்1பி விசா நடைமுறை தொடர்ந்து நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?
- ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை
- பதவியேற்றவுடன் இந்தியாவுக்கு முன்னுரிமை: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
- US Birthright Citizenship: ட்ரம்ப் உத்தரவுக்கு இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு