லாகூரில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னணியில் ஐசிசி? பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2 days ago
ARTICLE AD BOX

லாகூரில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னணியில் ஐசிசி இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாக ஒரு நொடி இந்திய தேசிய கீதம் இசைக்கபப்ட்டு இருந்தது.
 

லாகூரில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னணியில் ஐசிசி? பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி போட்டிகள் ம்ட்டும் துபாயில் நடக்கும். ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் விளையாடும் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படுவது வழக்கம். 

அதன்படி நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்பாக தேசிய கீதம் இசைப்பட்ட நிலையில், முன்னதாக இரு அணி வீரர்களும் வரிசையாக நின்றனர். அப்போது இந்திய தேசிய கீதத்தின் ஒரு பகுதி இசைக்கப்பட்டதை சில நொடி இசைக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

லாகூரில் இந்திய தேசிய கீதம்

மேலும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாகூரில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட வீடியோக்கள் சமூலவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. லாகூரில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டாதால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் சிலர் கொந்தளித்தார். ''இந்தியா நமது நாட்டுக்கு விளையாட மறுத்த நிலையில், இந்திய தேசிய கீதம் லாகூரில் எப்படி இசைக்கப்பட்டது?'' என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியை குற்றம் சாட்டியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் உள்ள அணிகளின் தேசிய கீதம் பிளேலிஸ்ட்டுக்கு ஐசிசி சில விளக்கங்களை வழங்க வேண்டும் என்று பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. ''இந்தியா பாகிஸ்தான் விளையாடாத நிலையில், பிளேலிஸ்ட்டில் இருந்து இந்தியாவின் தேசிய கீதம் எப்படி தவறுதலாக இசைக்கப்பட்டது? என்பதை ஐசிசி விளக்க வேண்டும்'' என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜோஸ் இங்லிஸ் கலக்கல்! இமாலய இலக்கை சேஸ் செய்து வரலாறு படைத்த ஆஸி.!

ஐசிசி-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், ஐசிசிக்கும் இடையே மோதல் உண்டாகி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி கேப்டன்களின் சந்திப்புக்கு ரோகித் சர்மாவை அனுப்ப பிசிசிஐ மறுத்ததால் அந்த நிகழ்ச்சியையே ஐசிசி ரத்து செயதது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. 

ஐசிசி-பிசிபி

கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இந்தியா வங்கதேசத்துடன் விளையாடியபோது, ​​தொலைக்காட்சித் திரைகளில் பாகிஸ்தான் லோகோ காட்டப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதி இருந்தது. இதற்கு பதிலளித்த ஐசிசி ''பாகிஸ்தான் சொல்வது முற்றிலும் தவறு. துபாயில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானின் பெயருடன் லோகோ பயன்படுத்தப்படும்'' என்று தெரிவித்தது.

இவருக்கு 43 வயசுனு யார் சொன்னது! பாய்ந்து கேட்ச் பிடித்த யுவராஜ் சிங்! ரசிகர்கள் பிரம்மிப்பு!
 

Read Entire Article