ARTICLE AD BOX
லா லீகா கால்பந்து தொடரில் வில்லார்ரியல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என வென்றது.
வில்லார்ரியல் அணியின் வீரர் ஜுவான் போய்த் 7ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார்.
2 கோல்கள் அடித்த எம்பாப்பே
அடுத்ததாக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாப்பே 17, 23ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
பின்னர் இரு அணியும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. முதல் பாதி முடிவில் 2-1 என ரியல் மாட்ரிட் முன்னிலை வகித்தது.
சமமான இரண்டாம் பாதி
பின்னர் இரண்டாம் பாதியில் இரு அணிகள் எவ்வளவு முயற்சித்தும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை.
இரு அணிகளும் சிறப்பாகவே பந்தினை பாஸ் செய்தது. வில்லார்ரியல் அணிக்கு 11 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் வீணடித்தன.
இந்தப் போட்டியில் 55 சதவிகிதம் பந்தினை ரியல் மாட்ரிட் அணியே வைத்திருந்தது.
புள்ளிப் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணி 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
லா லீகா தொடரின் புள்ளிப் பட்டியல்
1. ரியல் மாட்ரிட் - 28 போட்டிகள் - 60 புள்ளிகள்
2. பார்சிலோனா - 26 போட்டிகள் - 57 புள்ளிகள்
3. அத்லெடிகோ மாட்ரிட் - 27 போட்டிகள் - 56 புள்ளிகள்
4. அத்லெடிகோ கிளப் - 27 போட்டிகள் - 49 புள்ளிகள்
5. வில்லார்ரியல் அணி - 27 போட்டிகள் - 44 புள்ளிகள்