ARTICLE AD BOX
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம்.. இளையராஜாவை சந்தித்து வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
சென்னை: தனது இசையாத பலரை கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா, இவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று தான் சொல்லும் அளவிற்கு அனைத்து வயதினரும் இவரது பாடலை முணுமுணுத்து வருவார்கள் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்பட. இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்று பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்னும் இசையின் மூலம் ராஜங்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார் இளையராஜா. இவரின் முதல் படத்தில் இருந்தே இவரது பாடல்கள் சரித்திரமாகத் தொடங்கிவிட்டன. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் ஹம்மிங் மனதிற்குள் புகுந்து மனதை கரைத்துவிடும். இப்படி அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்து அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார். இளையராஜா இதுவரை சுமார் 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி இருக்கிறார். 10000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் சந்திப்பு: இந்த நிலையில், தான் வரும் 8ஆம் தேதி லண்டனில் முதல் சிம்பொனியை அரங்கேற்றுகிறார். இதன் காரணமாக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதைத் தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் நேரில் சென்று அவரிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நினைவு பரிசு: 35 நாட்களில் உருவாக்கப்பட்ட சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றுகிறார். அது ஆசியாவிலேயே யாரும் செய்யாத ஒரு சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரித்துள்ளார். யாழ் ஒன்றை நினைவுப்பரிசாகவும் வழங்கினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார்.