ARTICLE AD BOX
சீசன் ஆரம்பித்து விட்டது. இனி வீட்டில் இருக்கும் மாங்காயை வைத்து சுவையான மாங்காய் சாதம் லஞ்ச் பாக்ஸ்-க்கு பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாமே. ஈஸியான டேஸ்டியான மாங்காய் சாதம் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1 கிண்ணம் நறுக்கியது
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
கறிவேப்பிலை
புதினா இலை
கொத்தமல்லி இலை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1/4 கப்
சிவப்பு மிளகாய்
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கல் உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு மிக்ஸியில் நறுக்கிய மாங்காய், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். பிறகு சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அடுத்து கல் உப்பு சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
நன்கு வதங்கியதும் கடைசியாக வடித்த சாதத்தை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் அவ்வளவு தான் சுவையான மாங்காய் தேங்காய் சாதம் தயார்.