ARTICLE AD BOX
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது 'தி.மு.க' தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதிக் கொடுத்திருந்தது. இதனாலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் 'தி.மு.க'வை ஆதரித்து வந்தனர். 'அ.தி.மு.க'வும் பெரிதாக அவர்களின் ஓட்டு வங்கியைக் குறி வைப்பதில்லை.
இந்நிலையில் ஆட்சிக்கு வந்த 'தி.மு.க' இதுவரை தங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டதாக ஏமாற்றம் தெரிவிக்கின்றன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள்.

தி.மு.க அரசின் இந்தப் போக்கைக் கண்டிக்கும் விதமாகக் கடந்த மாதங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவை ஏதும் கைக் கொடுக்கவில்லை. 'அ.தி.மு.க'வும் இதில் எந்தவித தலையீடும் செய்யப்போவதில்லை என 'தி.மு.க' மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 'தி.மு.க' ஆட்சிக்காலத்திற்கான கடைசி முழு பட்ஜெட்டை கடந்த மார்ச் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதிலும் தங்களுக்கான கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை, தங்களுக்கான திட்டங்களும் ஏதுமில்லை என கொந்தளித்துப்போய் இருக்கின்றனர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
`மத்தியில் எதிர்த்த திமுக, மாநிலத்தில்... அரசு செய்வது சரியா?!’ - கொதிக்கும் அரசு ஊழியர் அமைப்புகள்வேறுவழியின்றி, இந்த 'தி.மு.க' அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று மார்ச் 19ஆம் தேதி (இன்று) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, "இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களை தவிர்த்து வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது" என எச்சரித்துள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks