ARTICLE AD BOX
ரோபோ சங்கர் மகள் இவ்வளவு சின்சியரா?.. குழந்தை பெற்றதும் என்ன செஞ்சிருக்கார் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவருக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார். கார்த்திக் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார் இந்திரஜா. அவர்களுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பெற்ற கையோடு இந்திரஜா செய்திருக்கும் செயல் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது.
சின்னத்திரையில் நடந்த காமெடி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரோபோ சங்கர். அந்த ஷோக்களில் மிமிக்ரி செய்து பலரையும் கவர்ந்த அவர்; டைமிங் காமெடி அடிப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாரி படத்தில் நடிகராக அறிமுகமாகி திரைத்துறைக்குள் வந்தார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. முக்கியமாக அவரது நடிப்பை தனுஷே வியந்து பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிசையாக படங்கள்: மாரி படத்தில் ரோபோவின் நடிப்பை பார்த்த தமிழ் திரைத்துறையினர் அவரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அந்தவகையில் வாயை மூடி பேசவும், விஸ்வாசம், சிங்கப்பூர் சலூன் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். இப்போதும் அவரது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. அடுத்தடுத்து பல படங்களில் கண்டிப்பாக கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் ஒருவழியாக அதிலிருந்து மீண்டார்.
அஜித்துக்கு என்ன ஆச்சு?.. கார் ரேஸில் அய்யோ இவ்வளவு பெரிய விபத்தா?.. பதற வைக்கும் வீடியோ
மதுதான் காரணம்: ரோபோ சங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியதுதான் காரணம். அதனை அவரே சிகிச்சையை முடித்துவிட்டு கொடுத்த பேட்டிகளில் ஒத்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது முற்றிலுமாக மதுவை நிறுத்தியிருக்கும் அவருக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார். இந்திரஜாவும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அறிமுகமான அவர்; அடுத்ததாக விருமன் படத்தி நடித்தார்.
இந்திரஜாவின் திருமணம்: சூழல் இப்படி இருக்க இந்திரஜா கடந்த வருடம் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ரோபோ சங்கரின் மனைவிக்கு பழக்கமான கார்த்திக்; அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறினார். அவரை சங்கரின் மனைவி தனது சகோதரர் என்றே கூறுவார். அந்த அளவுக்கு நெருக்கம். அந்த நெருக்கத்தின் காரணமாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மதுரையில் திருமணமும், சென்னையில் ரிசப்ஷனும் பிரமாண்டமாக நடந்தது.
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது காதல்?..அந்தப் பெண்ணுடன் இப்படித்தான் பழக ஆரம்பித்தாரா?
குழந்தை பெற்ற பின் செய்த செயல்: சூழல் இப்படி இருக்க இந்திரஜா - கார்த்திக் தம்பதிக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பெற்ற கையோடு இந்திரஜா செய்திருக்கும் செயல் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது அவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் கூரன் படத்தில் முக்கியமான கேரக்டரை ஏற்றிருக்கிறார். அதுதொடர்பாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார். அந்தப் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கர் மகள் இவ்வளவு சின்சியரா என்று கமெண்ட்ஸ் செய்து பாராட்டிவருகின்றனர்.