ARTICLE AD BOX
Roja: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் அதில் நடித்த ஹீரோ சிபுவிற்காகவே ஹிட் அடித்த நிலையில் அவர் திமிர்த்தனங்கள் குறித்து பிரபல நடிகை வடிவுக்கரசி சொல்லி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சன் டிவியில் சரிகம தயாரிப்பில் ஒளிபரப்பானது ரோஜா சீரியல். இதில் சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் வடிவுக்கரசியும் நடித்திருந்தார். சன் டிவியில் டிஆர்பி ஹிட் சீரியலாக இருந்தது.
1300 எபிசோடுக்கு அதிகமாக ஒளிபரப்பான இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது சரிகம யூட்யூப் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தும் முதல் சீசன் பிரியங்கா மட்டும் இருக்க இரண்டாவது சீசனில் ஹீரோ மாற்றப்பட்டு இருக்கிறார். ரசிகர்கள் சிபு சூரியனுக்காக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த சீரியலில் சிபுவிற்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். அதனால் அவரை அர்ஜூன் சார் எனவும் அழைக்க தொடங்கினர். சன் டிவியை தொடர்ந்து விஜய் டிவி என மாறி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கெட்டிமேளம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் சிபு சூர்யன் ரோஜா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சற்று திமிரோட தான் நடந்து கொள்வாராம். அதுகுறித்து அந்த சீரியலில் நடித்த வடிவுக்கரசி கூறும்போது, நானே டயலாக் பேசுனா அந்த ஹீரோக்களாம் கோபம் வந்துருது. நல்ல பசங்க இருக்காங்க.
ஆனால் பெங்களூரில் இருந்து இறக்குமதி செய்ற ஆளுங்க தான் இப்டி. என்ன அன்னபூரணி மட்டும்தான் டயலாக் பேசனுமா? என்பான். நானோ அவனையே பேச சொல்லுங்க. எனக்கு அஞ்சாம் தேதிலேந்து சரிகமவில் இருந்து சம்பளம் வரும். அது போது.
நாங்க எல்லாம் ஷூட்டிங் வந்து நிப்போம். அவன் வரதுக்கே நேரம் ஆகும். வந்தாலும் அன்னப்பூரணி வந்தாச்சா எனக் கேட்பான். அவன் வயசு பிரபலங்களுடன் போட்டி போடாமல் என்னிடம் வம்பு செய்துக்கிட்டு இருப்பான் என காட்டமாக பேசி இருக்கிறார்.