ரோகித் சர்மாவின் பிரம்மாஸ்திரம்! இவர் சிறப்பாக ஆடினால் இந்தியா வெற்றி

19 hours ago
ARTICLE AD BOX

Hardik pandya, Team India | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக கருத்தப்படும் இரண்டு அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியை வைத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அணியை ஓரளவுக்கு யூகித்துவிடலாம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இது. ஆனால், ஐ.சி.சி போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி மீது தொடர்ந்து நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை இருஅணிகளும் ஒரே ஒருமுறை மட்டும் மோதியிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டத்தை வென்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய அணியின் ஒரு பிளேயர் சிறப்பாக ஆடிவிட்டால் போதும். அவரே இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாகவும் இருப்பார். 

இந்திய அணியின் பிரம்மாஸ்திரம்

அவர் வேறு யாருமல்ல, ஹார்டிக் பாண்ட்யா தான். தனி ஒருவராக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்யக்கூடிய ஒரு பிளேயர் என்று இவரை தைரியமாக சொல்லலாம். அவ்வளவு திறமைகளைக் கொண்டிருக்கும் ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மேட்ச் வின்னராகவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஹர்த்திக் பாண்ட்யா மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசவும் முடியும், குறைந்த பந்துகளில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி போட்டியின் முடிவை மாற்றவும் முடியும். அவருடைய ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து 

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே இதுவரை மொத்தம் 118 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 60 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து அணி 50 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்துள்ளது. 7 போட்டிகள் முடிவில்லாமல் போய்விட்டன. இது தவிர, 1 போட்டி டையில் முடிந்திருக்கிறது. 

IND vs NZ: பிளேயிங் லெவன் கணிப்பு

இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து அணி: வில் யங், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டாம் லதாம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கெல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), வில் ஓ ரூர்க், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன்

மேலும் படிக்க | அசைக்க முடியாத ஆல்ரவுண்டர்; அஸ்மதுல்லா ஓமர்சாய் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்?

மேலும் படிக்க | இந்தியா - நியூசிலாந்து போட்டி.. ரோகித்தின் நிலை என்ன? முக்கிய பவுலர் நீக்கம்?

மேலும் படிக்க | IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவாரா? ஆடினால் எந்த இடத்தில் ஆடுவார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article