ARTICLE AD BOX

பாலிவுட் சினிமாவில் பிரபல டைரக்டர் மற்றும் நடிகருமாக அனுராக் காஷ்யப் இருக்கிறார். இவர் தி லஞ்ச் பாக்ஸ், கேம்ஸ் ஆப் வாசிப்பூர், ஷார்ட்ஸ், பிளாக் ஃப்ரைடே போன்ற திரைப்படங்கள் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது, திரைப்படத் துறையில் புரிபவர்களிடமிருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன்.
இந்த துறை மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. அனைவரும் எதார்த்தமற்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ரூ. 500 கோடி, ரூ.800 கோடிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். கலைக்கான மதிப்பு இங்கு போய்விட்டது என்று அவர் தெரிவித்தார்.