அஜீத்தின் இதிகாசம் வராமல் போயிடுச்சே... அதுமட்டும் வந்ததுன்னா செம மாஸ்தான்!

3 hours ago
ARTICLE AD BOX

அஜீத் சரவணன் சுப்பையா இயக்கத்தில் சிட்டிசன் படத்தில் நடித்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜீத், சிம்ரன் இயக்கத்தில் சரவணன் சுப்பையா இதிகாசம் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். வரலாற்றுப் பின்னணியில் இந்தக் கதை தயாராவதாக இருந்தது.

இதிகாசம்: படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேட்கும் கேள்வியும், அதற்கு சித்ரா லட்சுமணன் என்ன பதில் சொல்கிறார் என்றும் பார்க்கலாமா...

சரவணன் சுப்பையா: சிட்டிசன் படத்தைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையா ஏன் தொடர்ந்து படங்களை இயக்கவில்லை? சிட்டிசன் வெற்றிப்படம்தானே. அப்படி இருந்தும் அந்த இயக்குனருக்கு தொடர்ந்து படங்கள் இயக்குவதற்கு ஏன் வாய்ப்புகள் வரல. நடிகர் அஜீத்தும் ஏன் அவருக்கு அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கவே இல்லைன்னு ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.


அஜீத், சிம்ரன்: அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான். சிட்டிசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குனரான சரவணன் சுப்பையா இதிகாசம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்தப் படத்தில் அஜீத், சிம்ரன் நடிப்பதாகவும் இருந்தது. என்ன காரணத்தாலோ அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

அதுமட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்குல ரெண்டு மூணு படங்கள் அவர் பேருல தொடங்கப்பட்டு எந்தப் படத்துக்கும் படப்பிடிப்பு நடக்காமலே போய்விட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சரவணன் சுப்பையா இயக்கிய படம் தான் ஏபிசி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெரும் வரவேற்பு: அஜீத்தைப் பொருத்தவரை எந்த ஒரு வரலாற்றுப் படத்திலும் நடிக்கவில்லை. ஒருவேளை இந்தப் படத்தில் அவர் நடித்து இருந்தால் ஒரு மாறுபட்ட கோணத்தில் அஜீத்தை நாம் கண்டு ரசித்திருக்க முடியும். அதுமட்டும் இல்லாமல் படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸாக இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.

Read Entire Article