ரேஷனில் பாமாயில் வாங்கிட்டீங்களா? பாமாயிலை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது தெரியுமா?

19 hours ago
ARTICLE AD BOX

ரேஷனில் பாமாயில் வாங்கிட்டீங்களா? பாமாயிலை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது தெரியுமா?

Health
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமாயிலை சாப்பிடுவதால் நன்மையா, தீமையா என்பதை பார்க்கலாம். ரேஷன் கடையில் பாமாயில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாமாயிலை பலர் வாங்கி சமைத்து உண்கிறார்கள்.

பனையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்யைதான் பாமாயில் என்கிறோம். இந்த எண்ணெய் பார்ப்பதற்கே அடர்த்தி அதிகமாக இருக்கும். தற்போது செக்கில் ஆட்டிய எண்ணெய்களையே பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் பாமாயிலை பயன்படுத்துவது சரியா தவறா என்பதை பார்க்கலாம்.

health palm oil

இதுகுறித்து லங்கா ஸ்ரீ செய்தி தளத்தில் இருந்து எடுத்ததாக சாமுவேல் ஜோசப் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: செம்பனை நெய்(Palm oil) சாப்பிடக் கூடாது என பலரும் கூறக் காரணங்கள் என்ன?
பாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

எண்ணெய்

சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன.

பாமாயிலால் பிரச்சினை

குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கப் போவதில்லை. ஆனால், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம், யாரெல்லாம் உபயோகிக்கக் கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

கொழுப்புச் சத்து

பாமாயிலில் அதிகப்படியான கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உங்களுக்கு இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உடல் எடை

பாமாயிலின் அதிகப்படியான கொழுப்பு, உடல் எடையை அதிகரிக்கக் கூடும். ஆனால், தினமும் பாமாயிலை உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிப்படியாக நீக்கும். பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும்.

பால்மிடிக் கொழுப்பு

பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும். எனவே, இது வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, வளர்சிதை நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். பாமாயிலை சமைக்கும் போது அது ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

பாமாயில் ரத்த அழுத்தம்

ஆய்வு முடிவுகள் கூட, சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆனால், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. பாமாயிலில் உள்ள டோக்கோஃபெரல்கள் இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இது உடலில் புதிதாக ஏற்படும் எந்த ஒரு அசாதாரணமான செல்களையும் அழித்துவிடும். மேலும், புற்றுநோய் செல்களை சாதாரண செல்களாக மாற்றிவிடும்.

கண்களுக்கு நல்லதா

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்யலாம். கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஏ (ரெட்டினால்) உருவாவதற்கு பீட்டா கரோட்டின் முன்னோடியாகும். வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமநிலையற்ற பாமாயிலால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

ஹார்மோன் பிரச்சினை

ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது சிறந்தது. பாமாயிலில் வைட்டமின் இ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாமாயிலை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்கிவிடும். மேலும், இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும்.

வைட்டமின் ஏ சத்து

வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு உங்களுக்கு இருந்தால் பாமாயிலை எந்த தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். தினசரி உணவில் பாமாயிலை சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ கிடைத்துவிடும். அது பாமாயிலின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று. இவ்வாறு அந்த பதவில் அவர் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
English summary
Is it safe to use Palm oil? What are the uses of it?
Read Entire Article