ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்யும் சீக்ரெட் டிப்ஸ்

3 hours ago
ARTICLE AD BOX

தந்தூரி சிக்கன் பலருக்கும் ஃபேவரைட்டான உணவாக இருந்தாலும், அதை செய்வதற்கான தந்தூரி ஓவன் இல்லாததால், வீட்டில் செய்ய முடியாமல் கடையிலேயே வாங்கி சாப்பிட வேண்டி உள்ளதே என நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம்.  உங்கள் வீட்டு அடுப்பிலேயே, நெய் போல உருகும், மொறுமொறுப்பான தந்தூரி சிக்கனை தயார் செய்யலாம். அதற்கான ரகசிய டிப்சை ஒரு முறை முயற்சி செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம் ( தோல் நீக்கி, வெட்டிய துண்டுகள்)
தக்காளி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் -1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன் (கைகளால் மசித்து சேர்க்கவும்)
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு (மணத்திற்காக)
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்

வாக்கிங்-ஜாக்கிங் : தொப்பையை வேகமாக குறைக்க இரண்டில் எது பெஸ்ட்?

செய்முறை:

- சிக்கனை நன்றாக கழுவி, அதை தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் உறைய விடவும்.
- ஒரு அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும். பின்னர் மசாலாவில் தடவி ஊற வைத்த  சிக்கன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் கிளறி வேக வைக்கவும்.
- அதன் மீது சிறிது நெய் விட்டு மூடியை மூடவும். இது சிக்கனுக்கு அசலான தந்தூரி மணத்தை தரும்.
- மொறுமொறுப்பாக வருவதற்கு  ஒரு தட்டில் சிக்கனை எடுத்து, மேலே சிறிது பட்டர் தடவி, அடுப்பின் நேரடி தீயில் சுற்றி சுட்டு, அது ஓரங்களில் மொறுமொறுப்பாக மாறும் வரை வைத்திருப்பது நல்லது.
- அடுப்பில் நேரடியாக சுடுவது சிரமமாக இருந்தால் ஜல்லடை போன்ற ஸ்டிடாண்ட் இருந்தால் அதை அடுப்பு தீயின் மீது வைத்து, அதன் மீது சிக்கலை வைத்து விடலாம். இது ரெஸ்டாரன்டில் கிடைப்பது போலவே மொறுமொறுப்பான தந்தூரி சிக்கனை கொடுக்கும்.
- சுட சுட தந்தூரி சிக்கனை, புதிதாக நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.

சிறப்பு குறிப்புகள்:

- அதிக தீவிரமான மணம் வேண்டும் எனில், நீரில்லாமல் மசாலாக்கள் சேர்த்து சிக்கனை ஊற வைக்கலாம். 
- மொறுமொறுப்பு வருவதற்கு சிக்கன் மீது சிறிதளது கான் ஃபிளவர் சேர்க்கலாம்.
- தேவைப்பட்டால் கடைசியாக சிறிது நெய்யைத் தடவி மேலும் சுவை கூட்டலாம்.

இந்த எளிய முறையைப் பின்பற்றி, உங்கள் சமையலறையிலேயே அசத்தலான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கனை தயாரிக்கலாம்.

Read Entire Article