ARTICLE AD BOX
ரெட்ரோ பட கனிமா பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ‘கண்ணாடி பூவே‘ எனும் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது நாளை (மார்ச் 21) மாலை 5 மணி அளவில் இந்த படத்தில் இருந்து ‘கனிமா’ எனும் இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது.
Get, Set, Kuthu 💿#Kanimaa from #Retro ❤️
Releasing tomorrow, at 5PM.#RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911 @jacki_art #MayaPandi… pic.twitter.com/0FcuK4ltKN
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 20, 2025
இந்நிலையில் இந்த பாடல் தொடர்பான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த பாடலானது கல்யாண பாடல் போல் தெரிகிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.