ARTICLE AD BOX
ரூமுக்குள் அடைக்கப்படும் ரத்னா.. தேடி அலையும் குடும்பம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: ரத்னாவுக்கும் அறிவழகளுக்கும் கள்ளக்காதல் என ஊரறிய சொல்லிவிட்டால், ரத்னாவின் மானம் போகிவிடும். அந்த நேரம் பார்த்து ரத்னாவுக்கு வாழ்க்கை கொடுப்பது போல நடித்து, ரத்னா மனதில் இடம் பிடித்து வாழ்க்கையை தொடங்கி விடலாம் என திட்டம் போட்ட வெங்கடேஷன். பள்ளியில் பியூனாக வேலை செய்யும் செய்பவனிடம் மயக்க மருந்தை கொடுத்து, அதை டீ யில் கலந்து விடும்படி சொல்ல அவனும் டீயில் மயக்கம் மருந்தை கலந்து விடுகிறான். இதையடுத்து, இன்று நடப்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் அறிவழகன், ரத்னா இருவரும், மயங்கிய நிலையில் இருக்க அவர்கள் இருந்த அறையை மூடிவிட்டு வேறு யாரும் வந்துவிடக் கூடாது என வெளியில் நின்று கொண்டு இருக்கிறான். அந்த நேரம் பார்த்து கனி, அந்த இடத்திற்கு வந்து, அக்கா எங்கே என்று கேட்க பியூன், ரத்னா மேடம் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு எங்கோ சென்று விட்டார்கள் என்று சொல்ல கனியும் வீட்டுக்கு வந்து விடுகிறாள். அப்போது வீட்டில் இருப்பவர்கள் ரத்னா எங்கே என்று கேட்க, அக்கா ஏதோ வேலையா வெளியில போய்ட்டாங்கனு பியூன் சொன்னார். நானும்,அக்காவிற்கு போன் பண்ணேன் அக்கா போனை எடுக்கவில்லை என்று சொல்கிறாள் கனி.

ரத்னாவிற்கு என்ன ஆச்சு: ஆனால், நேரம் ஆகியும் ரத்னா வராததால், கனி பயந்து போய், ரத்னாவிற்கு மீண்டும் மீண்டும் போன் செய்து கொண்டே இருக்கிறாள். அப்போது சண்முகம், முத்துப்பாண்டி என அனைவரும் வர, கனி ரத்னா வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிகிறது. ரத்னா யாருகிட்டயும் சொல்லாம எங்கேயும் போக மாட்டாளே, எங்கே போய் இருப்பா என்று அனைவரும் பதறுகின்றனர். அப்போது முத்துப்பாண்டி, எனக்கெனவோ வெங்கடேசன் மேலதான் சந்தேகமா இருக்கு, கூட இருந்துகிட்டு அவன் ஏதாவது பண்ணி இருப்பான் என்று சொல்ல. உடனே சண்முகம், இப்பொழுது நாம் ரத்னாவை கண்டுபிடிப்போம் அதுவரை அமைதியாக இருக்கலாம் என்கிறான்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம் பரணி, பாக்கியத்திற்கு போன் செய்து ரத்னா இன்னும் வீட்டுக்கு வரல, எங்க போனான்னு தெரியல யார் போன் போட்டாலும் எடுக்கல என்று சொல்ல பாக்கியம் பதறிப்போய், என்னது ரத்னா இன்னும் வீட்டுக்கு வரலையா? என்று பதற்றமாக கேட்க, இதை பார்த்த சவுந்தர பாண்டி, என்னாச்சு ஏன் இவ்வளவு பதற்றப்படுற என்று கேட்க, பாக்கியம், ரத்னா வீட்டுக்கு வராத விஷயத்தை சொல்கிறாள். எதுக்கு இவ்வளவு பயப்படுறீங்க, அவ எங்க போய் இருக்க போற, நம்ம ஆளுங்க நாலு பேரும் சேர்ந்து எல்லா இடத்துலயும் தேடலாம் என்று சௌந்தரபாண்டியும் ரத்னாவை தேடி ஆட்களை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான்.