ARTICLE AD BOX
ஃபயர் படம் பாத்துட்டு எந்த பெண்ணும் என்ன கூப்புடுல.. பாலாஜி முருகதாஸ் நச் பதில்!
சென்னை: நடிகர் பாலாஜி முருகதாஸ், ரச்சித்தா மகாலட்சுமி நடித்த ஃபயர் திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி வெளியானது. இந்த படத்தோடு பலத்திரைப்படங்கள் வெளியான போதும், இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தனது முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலில் நடித்த பாலாஜி முருகதாசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஃபயர் படத்தில் விவகாரமாக நடித்தது குறித்து பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஜெ எஸ் கே, 'ஃபயர்' படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.முதல் படத்திலேயே இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்து விட்டார். இப்படத்தில், பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், அனு, ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர். நாகர் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், காசி என்கிற ரோலில் பாலாஜி நடித்துள்ளார்.

ஃபயர் படத்தின் கதை: பிசியோதெரபிஸ்டான பாலாஜி முருகதாசை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். காசி மாயமானது குறித்து விசாரணை நடத்தும் அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ஜெ. சதீஷ் குமார் நடித்துள்ளார். அவர் நடத்திய விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. ஆனால், காசிக்கு என்ன ஆனது என்று தெரியாததால், அவனை கண்டுபிடிக்குமாறு அமைச்சர் அளவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாவப்பட்ட பெண்களை நாசம் செய்யும் காசியை கண்டுபிடிப்பதில் அமைச்சருக்கு ஏன் ஆர்வம்?. காசி எங்கே போனார்? என அடுத்தடுத்த கேள்விகளுடன் ஃபயர் திரைப்படத்தின் கதை நகர்கிறது.
ஆண்கள் கூப்பிடுகிறார்கள்: இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களோடு படம் பார்த்த பாலாஜி முருகதாஸிடம் பெண் ஒருவர், இந்த படத்தை பார்த்து நான் விமர்சனம் கொடுத்தேன். அதைப்பர்த்த பல ஆண்கள் என்னை கூப்பிடுகிறார்கள். அதே போல படம் பார்த்த பெண்கள் உங்களை கூப்பிடுகிறார்களா என்று கேட்டார். அதற்கு பதில அளித்த பாலாஜி முருகதாஸ், ஃபயர் படத்தை பார்த்துவிட்டு எந்த பெண்ணும் என்னை கூப்பிடவில்லை, உன்னை கூப்பிடும் ஆண்கள் மோசமானவர்களாகஇருப்பார்கள் போல, அது போல கூப்பிடும் ஆண்களை தவிர்த்துவிடுங்கள். நாம் படத்தில் ஒரு கருத்தை சொன்னாலும், காந்தியே வந்து கருத்து சொன்னாலும், அது மாதிரியான ஆண்கள் திருந்த மாட்டார்கள். இந்த படத்தில் காசி என்கிற கதாபாத்திரத்தில் இயக்குநர் எப்படி நடிக்கசொன்னாதே அப்படித்தான் நான்நடித்து இருக்கிறேன். நான் காசிகிடையாது, காசி என்பது நான் நடித்த கதாபாத்திரம் தான் என்று பதில் அளித்தார்.