ARTICLE AD BOX
ரூ.5500 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் Redmi 5G.போன்.. 108MP கேமரா, 5030mAh பேட்டரி, 33W சார்ஜிங்! எந்த மாடல்?
கிட்டத்தட்ட எல்லா மொபைல் நிறுவனங்களுமே பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கி விட்டன. ஆகையால் இந்தியாவில் இந்த ட்ரெண்ட்-ஐ ஆரம்பித்து வைத்த நிறுவனங்களில் ஒன்றான ரெட்மி, முன்னதாக தான் அறிமுகம் செய்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை இன்னும் குறைத்து "இந்த போட்டியை" இன்னும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
"5ஜி ஸ்டார்" என்கிற டேக்லைனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைதளத்தில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் ஆப்ஷன் 30% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ12,499 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், 6.79-இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, குவால்காம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது Samsung ISOCELL HM6 சென்சார் மற்றும் f/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5030mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதறகான 4 காரணங்கள்: முதலாவது காரணம் - இது ஸ்மூத் ஆன 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகிறது. மூன்றாவது காரணம் - பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது டீசன்ட் ஆன பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதறகான 3 காரணங்கள்: முதல் காரணம் - இது பல எண்ணிக்கையிலான மூன்றாம் தரப்பு ஆப்களை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இதன் டிஸ்பிளே ஸ்மூத் ஆக இருக்கிறது ஆனால் ப்ரைட் ஆனதாக இல்லை. இதன் டிஸ்பிளே ப்ரைட்னஸ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம். மூன்றாவது காரணம் - இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லை.
அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் (மார்ச் 19) ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. மேலும் மேலும் அடுத்த மாதம் இன்னொரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. அது ரியல்மி 14 5ஜி (Realme 14 5G) ஸ்மார்ட்போனாகும். இது ரியல்மி பி3 5ஜி மாடலுடன் வட வடிவமைப்பு ஒற்றுமைகளை பகிர்ந்துகொள்ளும் என்பது போல் தெரிகிறது. ஆகையால் இரண்டில் ஒன்று தான் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும் டெக்னோ நிறுவனம் கூடிய விரைவில் அதன் ஸ்பார்க் 40 சீரீஸ் (Tecno Spark 40 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. முதலில் டெக்னோ ஸ்பார்க் 40 சீரீஸின் கீழ் டெக்னோ ஸ்பார்க் 40, டெக்னோ ஸ்பார்க் 40 ப்ரோ மற்றும் டெக்னோ ஸ்பார்க் 40 ப்ரோ பிளஸ் ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.