ARTICLE AD BOX
உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரூ.20,000 கோடி மதிப்பிலான நீண்டகால கடன் பத்திரங்களை வெளியிட வங்கி திட்டமிட்டுள்ளது. இதனால் திரட்டப்படும் மூலதனத்தைக் கொண்டு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் குறைந்தவிலை வீடுகளைக் கட்டுவதற்கான கடனுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ரூ.5,000 கோடி மதிப்பிலான பசுமை கடன் பத்திரங்களை வெளியிடவும் அண்மையில் நடைபெற்ற வங்கியின் இயக்குா் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.