ARTICLE AD BOX
ரூ.13000 டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலையில் கிடைக்கும் OnePlus போன்.. 100W சார்ஜிங், 50MP Sony கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 13 சீரிஸின் (OnePlus 13 Series) கீழ் அறிமுகமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்கள் தாறுமாறாக விற்பனையாகி கொண்டிருக்கும் வேளையில்.. இவ்விரு மாடல்களின் விற்பனையிலும் (குறிப்பாக ஒன்பிளஸ் 13ஆர் விற்பனையில்) முட்டுக்கட்டை போடும்படி ஆப்பிள் (Apple) நிறுவனம் ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ஐபோன் 16இ மாடலுக்கான சிறந்த ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனாக (Best Alternative Smartphone) பார்க்கபடுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில்.. புதிய ஐபோன் 16இ மாடலை வாங்கலாமா? அல்லது ஒன்பிளஸ் 13ஆர் மாடலை வாங்கலாமா? என்கிற யோசனையில் உள்ளவர்களை ஈர்க்கும்படியாக ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) ஸ்மார்ட்போனின் மீது அபாரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் (Amazon India) ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.13,000 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 23% நேரடி தள்ளுபடியை பெற்று அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கு வாங்க கிடக்கிறது.
இதோடு சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் (Credit Card) ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கிறது. இப்படியாக ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.29,999 க்கு கொண்டுவர முடியும். அதாவது முழுதாக ரூ.13,000 விலை குறைக்க முடியும். இந்த ஆபர் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து 3 கலர் (சன்செட் ட்யுன் கலர் உட்பட) ஆப்ஷன்களில் கிடைக்கிறது

ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் அமோஎல்இடி ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கிறது, எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பையும் பெற்றுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐபி64 ரேடிங்கையும் ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் 13ஆர் VS ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 13R Vs OnePlus 12R): ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் உள்ளது சற்றே பழைய 2022 ஆம் ஆண்டிற்கான பிளாக்ஷிப் ப்ராசஸர் ஆகும். ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் உள்ளது 2023 பிளாக்ஷிப் ப்ராசஸர் ஆகும்.
மேலும் ஒன்பிளஸ் 13ஆர் ஆனது 6.77-இன்ச் 1.5கே ப்ரோஎக்ஸ்டிஆர் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 12ஆர் ஆனது 6.78-இன்ச் 1.5K ப்ரோஎக்ஸ்டிஆர் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13ஆர் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷனை பெறுகிறது. ஆனால் ஒன்பிளஸ் 12ஆர் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனை பெறுகிறது. ஒன்பிளஸ் 13ஆர்-ல் பிளாட் டிஸ்பிளே உள்ளது. ஒன்பிளஸ் 12ஆர்-ல் கர்வ்டு டிஸ்பிளே உள்ளது.
இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்களை கொண்டுள்ளன. ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் 50எம்பி சோனி LYT-700 ப்ரைமரி கேமரா + 50எம்பி டெலிஃபோட்டோ + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமராக்கள் உள்ளன. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி IMX890 ப்ரைமரி + 8ம்பி அல்ட்ரா-வைட் + 2ம்பி மேக்ரோ கேமராக்கள் உள்ளன. இரண்டுமே 16ம்பி செல்பீ கேமராக்களை கொண்டுள்ளன.
கடைசியாக ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் உள்ள 6,000mAh பேட்டரி ஆனது ஒன்பிளஸ் 12ஆர் மாடலில் உள்ள 5500mAh பேட்டரியை விட பெரியது. ஆனால் இரண்டுமே 100W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகின்றன. ஓஎஸ் அப்டேட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 19 வரையிலான மேம்படுத்தல்களை பெறும். ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ஆண்ட்ராய்டு 17 வரையிலான அப்டேட்களை மட்டுமே பெறும்.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இந்தியாவில் இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் வாங்க கிடைக்கிறது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் +512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.