ரூ.110 கோடி பங்களா! ரூ.200 கோடி விளம்பர வருவாய்! சொத்து மதிப்பிலும் விராட் கோலி 'கிங்'தான்!

19 hours ago
ARTICLE AD BOX

Virat Kohli's net worth and income: இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக விராட் கோலி  உள்ளார். அண்மையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கோலி இப்போது ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் அளப்பரிய அன்பை பெற்ற ஆர்சிபி அணிக்காக களம் காண தயாராக இருக்கிறார்.  இந்நிலையில், விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம். 

விராட் கோலி சொத்து மதிப்பு

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள் மூலம் அபரிமிதமான சொத்துகளை குவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,100 கோடி ($127 மில்லியன்) என தகவல்கள் கூறுகின்றன. 

விராட் கோலியின் வருமான ஆதாரங்கள்

பிசிசிஐ ஒப்பந்தம் & ஐபிஎல் சம்பளம்: ஒரு மைய ஒப்பந்த வீரராக, கோலி பிசிசிஐயிடமிருந்து ஆண்டுதோறும் ரூ.7 கோடி சம்பாதிக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) உடனான அவரது ஐபிஎல் ஒப்பந்தம் அவருக்கு ஒரு சீசனுக்கு ரூ.15 கோடி வழங்குகிறது. 

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும்! அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன்!

போட்டி கட்டணம்

விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி201க்கு ரூ.3 லட்சம் சம்பளமாக பெறுகிறார். மேலும் பூமா, எம்ஆர்எஃப் மற்றும் ஆடி போன்ற பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து ரூ.196 கோடி சம்பாதிக்கிறார். அவர் ஒரு விளம்பரத்திற்கு ரூ.7.5-10 கோடி வசூலிக்கிறார்.

பென்ஸ், ஆடி கார்கள்

இது மட்டுமின்றி விராட் கோலி  FC கோவா (இந்தியன் சூப்பர் லீக்) மற்றும் ராக்ன் மற்றும் சிசல் போன்ற பிராண்டுகளின் இணை உரிமையாளராக உள்ளார். ஏராளமான விலை உயர்ந்த கார்கள் விராட் கோலியின் வசம் உள்ளது. ரூ.2.72 கோடி மதிப்பில் ஆடி R8 V10 பிளஸ் கார், ரூ. 2.97 கோடியில் ஆடி R8 LMX,  ரூ.1.51 கோடியில் ஆடி A8 L, ரூ. 4.04 கோடியில் பென்ட்லி கான்டினென்டல் GT என பல்வேறு விலை உயர்ந்த கார்கள் விராட் கோலியிடம் உள்ளன. 

ரு.80 கோடி 2 வீடு

விராட் கோலிக்கு சொந்தமாக மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் வீடு, குர்கானில் ரூ.80 கோடி மதிப்பில் ஆடம்பர வீடும் உள்ளது. கோலி சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். அவருக்கு 270 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

WPL 2025: 3 முறையும் பைனல் வந்து தோற்றது ஏன்? Delhi Capitals பயிற்சியாளர் விளக்கம்!

Read Entire Article