ARTICLE AD BOX
Published : 02 Mar 2025 10:57 PM
Last Updated : 02 Mar 2025 10:57 PM
ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘டிராகன்’

உலகளவில் ‘டிராகன்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. இப்படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகளவில் இப்படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் 1 மில்லியன் வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2025-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அமெரிக்காவில் 1 மில்லியனை கடந்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் இப்படத்துக்கு பின் சில படங்கள் வெளியானாலும், அவை எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தொடர்ச்சியாக திரையரங்க உரிமையாளர்கள் ‘டிராகன்’ படத்துக்கு தான் முன்னிரிமை அளித்து வருகிறார்கள். மேலும், தெலுங்கிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை அந்நிறுவனமே உலகமெங்கும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
What a Kathara Kathara Blockbuster! #Dragon crosses ₹100 Cr Worldwide in just 10 Days! Huge thanks to our amazing audience for all the love! @pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam
A @leon_james Musical #PradeepAshwathCombo… pic.twitter.com/X0xKWER2Oj
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- 44 ரன் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா | சாம்பியன்ஸ் டிராபி
- இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தலா? - விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுக்கு தவெக கண்டனம்
- ‘டாக்கு மகாராஜ்’ படத்துக்கு இன்னும் வரவேற்பு கிடைத்திருக்கலாம்: தயாரிப்பாளர் நாக வம்சி
- மகாராஷ்டிரா யாத்திரையில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: போலீஸார் வழக்குப் பதிவு