ARTICLE AD BOX
பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கியெழுந்த சமந்தா.. இனி அதிரடிதானாம்.. ரசிகர்கள் குஷி
சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சமந்தாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே க்ளாப்ஸ் எழுந்தது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மாடலாக இருந்து பின்னர் சினிமாவுக்குள் வந்தவர் சமந்தா. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்து அங்கும் தனது கொடியை பறக்கவிட்டார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் அவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

பிரிவில் முடிந்த திருமணம்: ஆனால் இருவரது திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய் அளவில் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதனை சமந்தா பெறுவதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு; மையோசிடிஸ் எனும் தோல் வியாதி வந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். எனவே சினிமாவிலிருந்து விலகினார்.
கொலை நடந்திருந்தது.. அவரை நான் உள்ளே விடல.. மனம் திறந்து பேசிய ராதிகா
தோல்வி படங்கள்: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர்; சினிமாவுக்கு மீண்டும் வந்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மறுபடியும் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதனையடுத்து ரீ எண்ட்ரி கொடுத்த அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ்&டிகே இதனை இயக்க; வருண் தவான் ஹீரோவாக நடித்தார்.இதில் சமந்தாவின் நடிப்புக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்தது.
இப்போது வெப் சீரிஸில்: சிட்டாடல் வெப் சீரிஸுக்கு பிறகு மீண்டும் புதிய வெப் சீரிஸில் நடித்துவருகிறார். இதற்கிடையே இயக்குநர்கள் ராஜ்&டிகே ஆகிய இரண்டு பேரில் சமந்தா ராஜை காதலித்துவருவதாகவும்; விரைவில் திருமணம் நடக்கும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட்டிலிருந்து தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
அடுத்த படங்கள்: இந்நிலையில் சமந்தா புதிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் நடிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்காக பல கதைகளை அவர் கேட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாதான் எனது முதல் காதலர்; இனி அதிலிருந்து ஒதுங்கியிருக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.