ARTICLE AD BOX
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் சகோதரி, சாக்ஷி பண்ட் திருமண கொண்டாட்டத்தில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர், தங்களின் மனைவியோடு கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் சகோதரி, சாக்ஷி பண்ட், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் அங்கித் சவுத்ரியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திருமணத்தின் கொண்டாட்டங்கள் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது.

முசோரியில் உள்ள ஆடம்பரமான ஐடிசி ஹோட்டலான தி சவோயில் சாக்ஷி திருமண கொண்டாட்டம் தற்போது களைகட்டி உள்ளது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சாக்ஷி பண்ட் மற்றும் அங்கித் சவுத்திரி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் தல தோனி தன்னுடைய மனைவி சாக்ஷியோடு கலந்து கொண்ட நிலையில், சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் மனைவியோடு கலந்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ரிஷப் பண்ட்டின் சகோதரி, ஒரு கிரிக்கெட் வீரரின் தங்கை என்பதை தாண்டி தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்தி கொண்ட நபர் ஆவர். எம்பிஏ பட்டம் பெற்று தேசிய மருந்தக சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அதே போல அவரது ஃபேஷன் உடைகள், மற்றும் தோற்றம் அதிகம் பேசவைக்கும் விதத்தில் இருக்கும் என்பதால், இவருக்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது