ARTICLE AD BOX
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் எந்த அணி இறுதிப் போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்த சீசன் ரிஷப் பண்டிற்கு சிறப்பாக இருக்கும் : சுரேஷ் ரெய்னா
இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் மிகப் பெரிய தொகைக்கு சில வீரர்கள் வாங்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.
அதோடு மட்டுமின்றி இந்த ஆண்டு லக்னோ அணியை வழிநடத்தப்போகும் கேப்டன் அவர்தான் என லக்னோ அணி அறிவித்திருந்தது. ஏற்கனவே டெல்லி அணிக்காக கேப்டன்சி செய்து வந்த ரிஷப் பண்ட் தற்போது புதிய அணியை வழிநடத்த இருப்பது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் நான்காவது வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என முன்னாள் சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த சீசன் ரிஷப் பண்டிற்கு மிகவும் முக்கியமான சீசனாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது கேப்டன்சி ஏற்கனவே சிறப்பாக இருந்து வருகிறது.
ஆனாலும் அவர் டாப் ஆர்டரில் வந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இந்த சீசனில் அவர் நான்காவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில் லக்னோ அணியில் ஏகப்பட்ட பேட்ஸ்மன்களும் இருப்பதால் அவர் முன்கூட்டியே வந்து சுதந்திரமாக விளையாட முடியும்.
இதையும் படிங்க : இத்தனை கோடிகளா? சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணிக்கு மெகா பரிசை அறிவித்த பிசிசிஐ.. ஐசிசி விட 3 மடங்கு
மேலும் நான்காவது இடத்தில் களமிறங்கினால் அவரால் இறுதிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்க முடியும். இந்த ஐ.பி.எல் தொடரானது அவருக்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.
The post ரிஷப் பண்ட் அந்த இடத்தில் விளையாடினால் நல்லா இருக்கும்.. அதுவே என் விருப்பம் – சுரேஷ் ரெய்னா appeared first on Cric Tamil.