ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு…!

1 day ago
ARTICLE AD BOX

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற சன்னியாசி, சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜ் தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு…! appeared first on Rockfort Times.

Read Entire Article