ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் விலகல்: சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

5 hours ago
ARTICLE AD BOX

அரக்கோணம்: ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக செயலாளர் பாவேந்தன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சமீபத்திய செயல்பாடுகளை கண்டித்தும், தன்னிச்சையாக செயல்படுகிறார், நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியும் மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர்.

இந்நிலையில் அரக்கோணத்தை சேர்ந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக செயலாளர் பாரிவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் பேசுவது ஏற்புடையதாக இல்லை. பெரியாரை விமர்சிப்பதும், தமிழ் தேசியத்திற்கு எதிராக பெரியாரை முன்னிறுத்துவதும், தமிழர் நிலத்தின் மக்களுக்கே பேராபத்தாக முடியும்.

அதுமட்டுமின்றி தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனையும், பெரியாரையும் எதிரெதிராக நிற்க வைப்பது தமிழ் தேசிய அரசியலுக்கு எதிரான பாசிச பாஜவிற்கும். சங்பரிவார்களுக்கும் விருந்தாக அமையும். கட்சியை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் சீமானின் இத்தகைய செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால் நாதக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இவர், கடந்த 2019ம் ஆண்டு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலிலும், கடந்த 2021ம் ஆண்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதியிலும் நாதக சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

* கிரீஸ் டப்பா பிசிறு என்பதா? சேலம் மாவட்ட நிர்வாகி முழுக்கு
சேலம் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், நாதகவில் இருந்து விலகுவாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாம் தமிழர் கட்சிக்கு உண்மையும், நேர்மையுமாக உழைத்த களப்போராளிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் பிசிறு, சாக்கடை அடைப்பு, கிரீஸ் டப்பா என்று ஓரம் கட்டி விட்டு, உழைப்பது போல வேடமிடும் கபடதாரிகளுக்கு அதீத முக்கியத்துவம், அங்கீகாரம் கொடுப்பது கட்சியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது. சமீபகாலமாக சீமான் இந்துத்துவா சக்திகளின் குரலாக மாறிவிட்டார். இனி என்னால் சங்கியாகவும், சகத் தோழனாகவும், பயணிக்க விருப்பமில்லை. எனவே, நாதகவில் இருந்து விலகிக் கொள்கிறேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

The post ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் விலகல்: சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article