ராஜஸ்தான் பேரவையில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

3 hours ago
ARTICLE AD BOX

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை விதிமுறைகளை மீறி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் வாசுதேவ் தேவ்னானி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : தில்லி பேரவை: அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவமதித்தார்.

அவரின் பேச்சை திரும்பப் பெற்று அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

ஆனால், எங்களின் பேரவை உறுப்பினர்களை அறிவிப்பின்றி இடைநீக்கம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் திகாரம் ஜூலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சட்டப்பேரவைக் கூட்டத்தை சுமுகமாக நடத்த அரசு விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து, இந்திரா காந்தி குறித்த அவதூறு பேச்சை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Read Entire Article