ARTICLE AD BOX
2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய உத்தியை மேற்கொண்டு வருகிறார். அதாவது, களமிறங்கியவுடன் எதிரணியைப் போட்டி பொளக்க ஆரம்பிப்பது. இதன்மூலம் எதிரணியை ஆரம்பத்திலேயே பதற்றத்திற்குக் கொண்டு செல்வது, மன ரீதியாக அவர்களை சோர்வடையச் செய்வது!
சில போட்டிகளில் இந்த உத்திகள் கைகொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம்., பரவாயில்லை., பின் வரிசையில் மிகச் சிறப்பான பேட்டர்கள் இருக்கிறார்கள். பார்த்துக்கொள்வார்கள். என் வேலை.. பந்துகளை எல்லைக்கு வெளியில் அனுப்புவது மட்டுமே.. என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார் ரோகித்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதுதான் நடந்து வருகிறது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில்கூட 36 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 41 ரன்களை எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 15 பந்துகளுக்குள் 3 பவுண்டரிகள் 1 சிக்சரை விளாசி 20 ரன்களை எடுத்தார். நான் களத்தில் அதிக நேரம் களத்தில் நிற்காமல் இருக்கலாம். ஆனால், நான் இருக்கும்வரை உங்களுக்கு ஆபத்து என்பதை எதிரணிக்கு ஆபத்து என்பதை எதிரணிக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார் ரோகித்.
அதன் நீட்சியாகத்தான் புதிய சாதனை ஒன்றையும் படைக்க இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் தற்போதுவரை 339 சிக்சர்களை அடித்துள்ள ரோகித் சர்மா இன்னும் 11 சிக்சர்களை அடித்தால் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 350 சிகசர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். மேலும் 2 சிக்சர்களை அடித்தால் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார். பாகிஸ்தானின் ஜாம்பவான் சாஹித் அப்ரிடி இதுவரை 351 சிக்சர்களை அடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அந்த சாதனையை ரோகித் முறியடிக்க அவருக்கு இன்னும் 13 சிக்சர்கள் தேவை. இதை இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே எட்டிவிடுவார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
ஏற்கனவே, மூன்று வித போட்டிகளையும் சேர்த்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை அவர் 632 சிக்சர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 553 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 11 ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.