ARTICLE AD BOX
நியூயார்க்: ரஷ்யா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ப்ளோரிடாவில் இருந்து நேற்று முன்தினம் வாஷிங்டன் புறப்பட்டுச்சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (இன்று) நான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசுகிறேன். அன்று ஏதாவது அறிவிக்க முடியுமா என்று பார்ப்போம். வார இறுதியில் நிறைய பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா என்று பார்க்க விரும்புகிறோம்” என்றார்.
The post ரஷ்யா- உக்ரைன் போர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று புடினுடன் பேச்சு appeared first on Dinakaran.