ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! இதுவரை அப்ளை பண்ணாதவங்களுக்கு.. ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்

4 days ago
ARTICLE AD BOX

ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! இதுவரை அப்ளை பண்ணாதவங்களுக்கு.. ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்

Jobs
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வேயில் தேர்வர்கள் எதிர்பார்த்த ஆர் ஆர் பி குரூப் டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை அமைப்பாக ரயில்வே உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். கை நிறைய சம்பளம் + சலுகைகள் இருப்பதால் ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான ஊழியர்களின் கனவாக உள்ளது. ரயில்வே வேலைக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் ரயில்வே வேலையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பல லட்சக்கணக்கான இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள்.

Job Jobs Employment RRB

இந்த நிலையில் தேர்வர்கள் பெரிதும் எதிபார்த்து இருந்த ரயில்வே குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிய இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப் டி தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்

யூனியன் வங்கியில் 2691 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்! டிகிரி முடிச்சவங்க அசத்துங்க
யூனியன் வங்கியில் 2691 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்! டிகிரி முடிச்சவங்க அசத்துங்க

பணியிடங்கள் விவரம்:
டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி - 5,058
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799
டிராக் மெயிண்டர்ன் (குரூப் - 4)- 13,187
அஸிஸ்டண்ட (P-Way) - 247
மெக்கானிக்கல் அஸிஸ்டன் (C&W) - 2,587

அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420
அஸிஸ்டண்ட் (ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) - 3077
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1,381
அஸிஸ்டன் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950
அஸிஸ்டன் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) - 744
உள்பட மொத்தம் 32,438 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை ஜனவரி 1, 2025 தேதிப்படி 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: 4 கட்ட தேர்வு முறைகள் உள்ளன. கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 பழனியாண்டவர் கல்லூரியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்! செம சான்ஸ்.. அப்ளை பண்ணுங்க
பழனியாண்டவர் கல்லூரியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்! செம சான்ஸ்.. அப்ளை பண்ணுங்க

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

அவகாசம் நீட்டிப்பு: ரயில்வேயில் உள்ள குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட தேதியின் படி விண்ணப்பிக்க வரும் மார்ச் 3, 2025 கடைசி நாளாகும்.

தமிழக மருத்துவ வாரியத்தில் வேலை.. 425 பணியிடங்கள்.. 1.30 லட்சம் சம்பளம்! டிப்ளமோ, டிகிரி தகுதி தான்
தமிழக மருத்துவ வாரியத்தில் வேலை.. 425 பணியிடங்கள்.. 1.30 லட்சம் சம்பளம்! டிப்ளமோ, டிகிரி தகுதி தான்

திருத்தம் மேற்கொள்ள: விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 13 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தேவையான சான்றிதழ்களை தயார் செய்து வைத்துக்கொண்டு விண்ணப்பியுங்கள்.

More From
Prev
Next
English summary
The Railways has released a notification to fill the RRB Group D vacancies that candidates have been waiting for. A total of 32,438 vacancies have been announced. It was informed that the last date to apply for these posts was February 22. Now the deadline to apply has been extended.
Read Entire Article