ARTICLE AD BOX
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், அதன் பிரபலமான எஸ்யூவியான ஸ்கார்பியோ-என் மாடலின் 2,00,000 யூனிட்கள் விற்பனையானதை நினைவுகூரும் வகையில் கார்பன் எடிஷனை வெளியிட்டுள்ளது.
எஸ்யூவி-களின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ஸ்கார்பியோ-என், தனது புதிய அவதாரமான கார்பன் எடிசனை தவிர்க்க முடியாத வடிவமைப்பு மற்றும் அதிநவீனத்துடன் விரிவுபடுத்துகிறது என்று மஹிந்திரா அண்ட மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஸ்கார்பியோ-என் கார்பன் இசட் 8 மற்றும் இசட் 8 எல் ஆகிய இரண்டு எடிஷனிலும் கிடைக்கும். இதன் விலை ரூ.19,19,400ல் தொடங்கி ரூ.24,89,100 (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.
குறிப்பாக 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், டிரைவிங் மோடுகள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் இந்த ஸ்கார்பியோ என் கார்பன் எடிஷனில் வழங்கப்பட்டுள்ளது.
டர்போ பெட்ரோல் இன்ஜினானது 203 ஹெச்பி பவரையும், டீசல் இன்ஜினானது 175 ஹெச்பி பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டு உள்ளது. இன்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் டீசல் இன்ஜினுடன் 4 வீல் டிரைவ் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கார்பன் எடிஷன் மாடலானது 7 இருக்கைகள் உடன் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விலை உயர்வை பரிசீலிக்கும் நெஸ்லே இந்தியா!